சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி ராமதாசிடம் எங்கே 5 ஆண்டுகளா தொகுதிப்பக்கம் காணோம் என கிண்டல் செய்த அதிமுக தொண்டர் வாயின் மீது முன்னாள் அமைச்சர் செம்மலை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைந்த ஓரணியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்பமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டார். அன்புமணிக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வாக்கு சேகரித்தார். அன்புமணி கருத்துப்பரப்புதல் செய்து கொண்டிருந்தபோது அதிமுக தொண்டர் ஒருவர், அவரைப் பார்த்து 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள்? என கேள்வி எழுப்பினார். தொண்டரின் கேள்வியால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை, கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கிருந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் முன்னிலையில், கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக தொண்டர் ஒருவரை முன்னார் அமைச்சர் தாக்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,107.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



