நமக்குள் வலிமையைக் கூட்டிக் கொள்ள நேர்மறையான சிந்தனையை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திரைப் பிரபலம் காஜல்அகர்வால். திரைப் பிரபலம் ரஜினியோ மறைபொருள் மீதான நினைவுகள் நம்மை வலிமைப் படுத்தும் என்கிறார். 18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தை நம்முள் தொடர்ந்து விதைத்து வரும் திரைப் பிரபலம் ரஜினகாந்த், யோகியின் சுயசரிதம் என்ற புத்;தகக் கருத்துக்களை ஒளி வடிவில் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, 'கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வையுங்கள், பக்தியுடன் கூடிய யோகா பயிற்சி செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும். யோகியின் சுயசரிதம் 125 ஆண்டுகளாக ஆன்மிக உலகை புரட்டி போட்ட புத்தகம், என தெரிவித்துள்ளார். நல்ல விசயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு என்கிறார் நடிகை காஜல் அகர்வால். இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பாரிஸ் பாரிஸ் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுடன் கதைத்தலைவியாக நடித்திருக்கிறார். ஹிந்திப் படமான கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட குயின் படத்தின் மறுதயாரிப்பே பாரிஸ் பாரிஸ். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குப் படம் தயாராக இருக்கிறது. அண்மையில் பல்வேறு விசயங்கள் குறித்து மனம் திறந்துள்ள காஜல், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன். நல்ல விசயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு என்கிறார் நேர்மறை சிந்தனை விரும்பியான காஜல் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,109.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



