சென்னை மெரினாவில், இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்க
உள்ளதாக வந்த தகவலையடுத்து, அங்கிருந்த கடைகளைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைத்துவருகின்றனர்.
இதனிடையே, மெரினாவில் போராட வந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பயிர்க்
கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய
தமிழக விவசாயிகள், கடந்த 16 நாள்களாக டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நடுவண் வேளாண்துறை அமைச்சர் ராஜா மோகன்
சிங் ஆகியோரை நேற்று விவசாயிகள் சந்தித்தனர். மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை,
விவசாயிகள் சந்தித்து மனு கொடுத்தனர். இந்த
நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, காவல்துறையினர் மெரினாவில் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, மெரினாவில் உள்ள கடைகளை இன்று காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைக்க வியாபாரிகளை
வலியுறுத்தினர். வருமானம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆவேசப்பட்டனர். இதனிடையே,
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த வந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த சோமன்பாபு என்பவரை
காவல்துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து, மெரினாவை காவல்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.
மெரினாவில் கூட்டம் கூடாமல் தடுக்கும் விதமாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,
மெரினா கடற்கரை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



