Show all

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா

3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4 வது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது.

 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணி கேப்டன்  விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவிலை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.

 

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்து. பின்னர் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்காக்க நிர்ணயம் செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்து. ராகுல் 13 ரன்களுடனும், முரளி விஜய் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி 106 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் கேடயமும்  இந்திய  அணி கேப்டன் கோலிக்கு தரப்பட்டது. முதலிடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.6.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.