Show all

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் திறப்பு

  • சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் செயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, அடையாறில் 2120 சதுர அடியிலான அரசு நிலத்தை ஒதுக்கி, அதில் ரூ.2.80 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட மணி மண்டபப் பணிகள் இந்த ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் மணி மண்டபத்தை எப்போது திறப்பது என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்காமலேயே இருந்தது. இந்நிலையில் இன்று நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், கார்த்தி, விஷால், ராஜேஷ், சரத்குமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜிகணேசன் குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.