மேற்காசிய நாடான, ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், ஐ.எஸ். என்கிற அதிரடிபோர;முறை அமைப்பு இயங்குகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்த் இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் தலையாய பகுதியான, மொசூல் நகரம், சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ் அதிரடிபோர;முறை அமைப்பின் தலைவர், அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. ஆனால் இதை, குர்த் மக்கள் படையும், அமெரிக்காவும் மறுத்தன. அவர், சிரியாவின், ரக்கா பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை, அல் பாக்தாதி, ஒருமுறை மட்டுமே, பகிரங்கமாக வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், ஐ.எஸ் சமூக வலைதளங்களில், அல் பாக்தாதியின் பேச்சு பதிவான, ஒலிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ‘ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களான நீங்கள் தான், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்; இஸ்லாத்தை காப்பாற்றும் வீரர்கள்; தோல்வியைக் கண்டு துவள வேண்டாம். உங்கள் தாக்குதலை தீவிரப்படுத்துங்கள். இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும் இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்ற, ஊடக மையங்கள் உட்பட, நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள். இஸ்லாமிய மைந்தர்கள், அல்லாவுக்காக, தங்கள் உயிரையும், உடலையும் தொடர்ந்து தியாகம் செய்வர்.’ இவ்வாறு பேச்சு பதிவு செய்யப் பட்டுள்ளது. இசுலாத்தில் இருக்கிற பல்வேறு மதப்பிரிவுகளான சன்னி, சியா, அகமதியா, சூபித்துவும், குரானிசம் போன்ற பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளும்- அமெரிக்காவின் தலையீடும் பல்வேறு முசுலீம் தீவிரவாத குழுக்களுக்கு அடிப்படையாய் இருக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



