Show all

தமிழர் நாகரிகத்தை உணர்த்தும் பழங்காலத் தாழிகள் கண்டுபிடிப்பு! தூத்துக்குடி, திருவைகுந்தம் பகுதியில்

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுந்தம் அருகே பழங்காலத்தமிழர்கள் வாழ்ந்ததற்கான முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து சிவகளை எனும் பகுதியிலும் பழந்தமிழர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தின் மேற்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு பரம்பு, பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த பரம்பில் ஏராளமான மண் தாழிகள் உள்ளள. மேலும் மண் தாழிகள் அருகில் எலும்புகளும், குதிரையின் லாடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து, இவற்றை வெளிகொண்டு வருவதற்கான ஆய்வுகளை தொல்லியல் துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,847.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.