ஒட்டு மொத்தத் தமிழகமும் அரசியல்
சல்லிக்கட்டில் களத்தில் இறங்கியுள்ளது. முதன்மையான ஆளும்வாய்ப்புப் பிடி விரர்கள்- பன்னீர்
செல்வம் ஆளும்வாய்ப்பின் திமிளை பிடித்துக் கொண்டு
ஓடி யார் நம்மைத் தூக்கி
விடப் போகின்றார்கள் என்ற எதிர்பாh;ப்போடு
சரிந்து கிடக்க, சசிகலா, ஆளும்வாய்ப்பின்
கொம்பைப் பிடித்துக் கொண்டு
ஓடிக் கொண்டிருக்க, பார்வையாளர்
அரங்கில் பலர், சசிகலா மட்டும்
ஆளும்வாய்ப்பை அடக்கி விடக் கூடாதே
என்கிற எதிர்பார்ப்போடும் சிலர் அவரின் வெற்றியை
எதிர் நோக்கியிருக்க, தீபா போன்றவர்கள் தாங்களும்
களத்தில் இருப்பதாகக் காட்ட பின்னாலேயே ஓடிக்
கொண்டிருக்க, ஒட்டு மொத்த தமிழகமே
அறப்போரில் வென்றெடுத்;த, உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர்
சல்லிக்கட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்
இன்று நடைபெற்று வருகிறது. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக
குரல் கொடுத்த நடிகர் ராகவா
லாரன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து சல்லிக்கட்டுக்கு ஆதரவளித்து வரும் நடிகர் ராகவா
லாரன்ஸ் இன்று அலங்காநல்லூர் சென்று
சல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டார். சல்லிக்கட்டு
போட்டி சரியாக 8 மணிக்கு தொடங்கிய சற்று
நேரத்திற்கெல்லாம் லாரன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்து
போட்டியைப் பார்வையிட்டு வருகிறார். நடிகர் லாரன்ஸ் வந்த
சற்று நேரத்திற்கெல்லாம் நடுவண் இணை அமைச்சர்
பொன். ராதாகிருஷ்ணன் சல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தந்தார். அவருக்கு
வரவேற்பு அளிக்கப்பட்டு விழா மேடையில் அமர
வைக்கப்பட்டார். அங்கு அமர்ந்து சீறி
வரும் காளைகளையும் அதனை பிடிக்கும் மாடுபிடி
இளைஞர்களையும் கண்டு ரசித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



