Show all

தமிழக அரசியல் விளையாட்டில் தற்போது பந்து நடுவண் ஆளும் பாஜக பக்கத்திற்கு வந்திருக்கிறது

இனி சசிகலா பன்னீர்செல்வம் கையில் பந்து இல்லை.

     இந்த நிலையில் நடுவண் அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பொறுப்பு ஆளுநர் உரிய முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

     தமிழக பொறுப்பு ஆளுநருடன் சட்டம்; ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கமளிக்க காவல் துறை இயக்குநர் ராசேந்திரன் அழைப்பை யேற்றுச் சந்திப்;;பு நிகழ்த்தியுள்ளார்.

     தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்     தமிழக பொறுப்பு ஆளுநருடன் அழைப்பை யேற்றுச் சந்தித்து ஆலோசனை.

     இந்நிலையில் வெற்று சர்ச்சைக்கு மட்டுமே பயன்தரவள்ள வகையில் எப்போதும் பேசி வரும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்ரமணியன்சாமி, 

சசிகலா தனக்கு உள்ள ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை அளித்தும் இன்னும் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன் என வினவியுள்ளார்.

     இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பன்னீர்செல்வம் தனக்கு உள்ள ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை ஆளுநரிடம் அளிக்கவில்லை. ஆனால் சசிகலா அதனை வழங்கியுள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் காத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

     நடுவண் பாஜக இயல்பாக சிந்தித்து,  சசிகலாவை முதல்வராக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவை அங்கிகரிக்குமா!

     நேரடியாக-

தமிழகத்தில் குளறுபடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதிமுக ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை அமுல் படுத்துமா!

     வெளிவட்ட ஆதரவுள்ள பன்னீர் செல்வத்தை அங்கிகரித்து குளறுபடிகளை பெரிது படுத்தி அதிரடி ஆட்சி கலைப்பு முயற்சியை அமல்படுத்துமா!

விரைவில் விடை தெரயும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.