செயலலிதா அவர்கள் சிறை சென்றபோது அவருக்காக முதல்வர்
பொறுப்பேற்றுக் கொண்டு அவரின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கினார். மெரினாவில்
தமிழ் இளைஞர்கள் வரலாறு காணாத அறப்போராட்டம் நடத்திய போது அந்த அறப்போராட்டத்தின் சக்திக்குக்
கட்டுப்பட்டு பம்பரமாகச் சுழன்று சல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்கினார். சல்லிக்கட்டை
நீக்குவதற்கு நடுவண் அரசு முழுமையாக ஒத்துழைக்கும்; எதற்கெடுத்தாலும் இளைஞர்கள் இதுபோல்
திரண்டு விடாமல் பாடம் கற்பியுங்கள் என்ற பாஜக மேலிட ஆணைக்குக் கட்டுப் பட்டவராக வரலாறு
காணாத அறப்போராட்டத்தை வன்முறையில் முடித்;;;;;;;து வைத்தார். சசிகலா
முதல்வராவதற்கு முன்னோட்டமாக தற்காலிக முதல்வராக பதவியேற்று தளத்தை சீர்படுத்துங்கள்
என்ற ஆணையை ஏற்றுக் கொண்டு முதல்வர் பொறுப்பேற்று திறமையாகச் செயல்பட்டார். இவற்றையெல்லாம்
ஒப்பிட்டுப் பார்க்கும் போது தற்போதும் அவர் யார் யாருக்காகவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்
என்று தெரிகிறது. உண்மையிலேயே
அவர் முதல்வர் பதவியைக் குறிவைத்து சொந்தமாக இயங்கியிருந்தால் பிரச்சனையில்லாமல் அவரே
முதல்வராகத் தொடர்ந்திருக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



