06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்கி தமிழக அரசு நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வு காவல்துறை விசாரணைக்கு மாற்ற காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று, மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள பேராசிரியர். நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் சந்தித்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறைச்சாலையில் அசராதான சூழ்நிலை உள்ளதாகவும். யாரினாலும் தன்; உயிர்க்கு ஆபத்து உள்ளதாகவும் நிர்மலாதேவி கூறினார் என்றும் இதுவரை எங்கள் சார்பிலோ அல்லது நிர்மலாதேவியின் சார்பிலோ சிறையில் தனி அறை கேட்கவில்லை என்றும் கூறினார். பெரிய ஆட்கள் தலையீடு உள்ள வழக்கு என்றால், குற்றவாளி மிக விரைவில் மின் கம்பியைக் கடித்தோ, தூக்கு போட்டோ தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த நடைமுறைதானே என்று மக்கள் கருத்து பதிவு செய்து வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,762.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



