06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்படியா வேலை நிறுத்தமா நடந்தது என்று பொதுமக்கள் வியப்பாக கேட்கும் திரைத்துறை வேலை நிறுத்தம் முடிவடைந்து விட்டதாம். நாளை கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி திரைப்படம் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது. வாராவாரம் மூன்று படங்கள் என்கிற அளவில் வரிசையாகப் படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் கௌதம் கார்த்திக் நடிக்கும், மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதனன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதமே நிறைவடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செயன் தயாரிப்பில், இயக்குநர் திரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தம் காரணமாக திரைப்பட விழாக்கள் எதுவும் நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், திரையுலகினர் தற்போது முழுவீச்சில் பணிகளில் இறங்கியுள்ளனர். இதனால், மிஸ்டர்.சந்திரமௌலி பட இசை வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திமுடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,762.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



