Show all

அட்சயதிருதியை அன்றைக்கு நகை வாங்கலாம். பறித்துக் கொண்டா ஓடுவது

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வளசரவாக்கம் நியூ பேதன்யா நகரை சேர்ந்தவர் ஆர்த்தி அகவை 24 இவர் அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இளநிலை அதிகாரியாக பணியாற்றுகிறார். 

வீட்டில் இருந்து பேருந்தில் என்.எஸ்.கே நகர் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கிய ஆர்த்தி அலுவலகம் நோக்கி சாலையில் நடந்துச்சென்றுள்ளார்.

கோவிந்தராஜுலு தெரு வழியாக நெல்சன் மாணிக்கம் சாலை நோக்கி சென்றபோது பின்னால் வந்த இருவர் ஆர்த்தி கழுத்தில் இருந்த 8 சவரன் செயினை அறுத்ததில் பாதி அவன் கையில் சென்று விட்டது. அப்போது ஆர்த்தி கூச்சலிடவே பொதுமக்கள் அந்த நபர்களை விரட்டி சென்றுள்ளனர்.

பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க ரங்கராஜீலு தெருவில் உள்ள வீட்டின் மாடியில் அந்த ஒரு நபர் ஏறி ஓடியுள்ளார். ஒரு கட்டத்தில் வசமாக மொட்டை பாடியில் சிக்கிய அவர் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

கீழே விழுந்து காயம்பட்டவர் பெயர் மூர்த்தி அகவை19 வடபழனி ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மற்றொரு நபரான சாரங்கபாணி என்பவரையும் பொதுமக்கள் பிடித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரையும் காவல் துறையினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் மூர்த்தி பலத்தகாயம் அடைந்ததால் நினைவிழந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூர்த்தி; உயிரிழந்தார். சாரங்கபாணி சிகிச்சை பெற்று வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,761. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.