திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தின் கருத்துப் பரப்புதல் வாகனத்தைத் தடுத்து, 'பகவான் கிருஷ்ணரை அவமரியாதை செய்த கி.வீரமணி ஒழிக' என்று பாஜக கொடியுடன் முழக்கமிட்ட அடையாளம் தெரியாத சில நபர்களை உள்ளூர் பொதுமக்கள் விரட்டியடித்தனர். 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநெல்வேலியை அடுத்த மானூர் தென்கலம் அருகேயுள்ள திருத்து பகுதியில் ஞானதிரவியம் நேற்று முன்தினம் இரவு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனது கருத்துப்பரப்புதல் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரது கருத்துப்பரப்புதல் வாகனத்தை தடுத்து, பாஜக கொடியுடன் அடையாளம் தெரியாத சில நபர்கள் முழக்கமிட்டதால் தொடக்கத்;தில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் கருத்துப்;பரப்புதல் கூட்டங்களில் கிருஷ்ணரை அவமதித்து, திமுக கூட்டணியில் உள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசி வருகிறார். அதை கண்டிக்காமல் இங்குவந்து ஏன் வாக்கு கேட்கிறீர்கள், என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டனர் அந்த பாஜக கொடியுடன் இருந்த நபர்கள். கொஞ்ச நேரத்தில் பொதுமக்கள் கூடத் தொடங்கினர். பாஜககொடியுடன் கலகத்தில் ஈடுபட முயன்ற அடையாளம் தெரியாத அந்த சில நபர்களை பொது மக்கள் விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து அமைதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து விட்டு ஞானதிரவியம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,112.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.