Show all

ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் கையிருப்பு: பச்சைப் பொய்யாம்! பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மோகன்ராஜ் ஜெபமணி பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் வேட்புமனுவில் ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் கையில் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி ரூபாய் உலக வங்கியில் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டது தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியது.

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இவர் வேட்பு மனுவில் கையிருப்பாக ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் இருப்பதாகவும் உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது பச்சை பொய். பச்சை பொய்யைச் சொல்லி பச்சை மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் பெற்றிருக்கிறார் இந்த  சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ். இந்தக் கெட்டிக்காரரின் புளுகு இரண்டு நாளிலேயே அம்பலமாகி விட்டது.

இதுகுறித்து மோகன்ராஜ் ஜெபமணி தெரிவித்ததாவது: 'எனக்கு 67 அகவை ஆகிறது. நான், மயிலாப்பூர் கிழக்கு அபிராமபுரத்தில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய தந்தை தியாகி ஜெபமணி, விடுதலைப் போராட்ட வீரர். மிசாவில் சிறைக்குச் சென்றவர். அவரின் பெயரில்தான் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கட்சி சார்பில்தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். வேட்பு மனுவில் ஒரு லட்சம் ரூபாய் கையில் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தத பொய்தான். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஓய்வு ஊதியத்தில் சேமித்த தொகை வங்கியில் 24,000 ரூபாய் உள்ளது. வேட்புமனுவில் வேண்டுமென்றேதான் தவறான தகவல்களைத் தெரிவித்தேன்' என்றார்.  

மேலும் தேர்தல் ஆணையம் எப்படிச் செயல்படுகிறது என்பதை தெரிவிக்கத்தான் தவறான தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பது 2 ஜி அலைக்கற்றை வழக்கில் உள்ள தொகை. அதுதான் என் கையில் இருப்பதாகக் குறிப்பிட்டேன். உலக வங்கி எனக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடனாக கொடுத்தது தமிழக அரசின் கடன். என்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் காவல்துறையில் காவல்ஆய்வாளராகப்  பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்றும்,  ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இருந்ததாகவும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,112.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.