Show all

ஆட்டு மந்தைகள்! குறும்படம் எப்படியிருக்கு?

ஐந்து நிமிடங்கள் பத்து வினாடிகள் ஓடும், 'ஆட்டு மந்தைகள்' என்னும் குறும்படம் புதினா லீவ்ஸ் புரடக்சன் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டு திங்கட்கிழமையன்று வலையொளியில் வெளியீடு செய்யப் பட்டுள்ளது.

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் கேள்விகள் என்ற தலைப்பில் வெளிநாட்டில் தொலைந்த அபிநந்தன் கிடைத்து விட்டார்; நம் நாட்டில் தொலைந்த முகிலன் என்ன ஆனார்? என்று முதல் கேள்வியை தொடங்குகிறது. இப்படி சில தூங்கும் கேள்விகளை நமக்கு அறிமுகப் படுத்தி விழிப்புணர்வு இல்லா தமிழர் நிலையைக் குத்திக் காட்டுகிறது.

தமிழர் ஆட்டு மந்தைகளாக, இணையத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமே வெட்டியாக  பொழுது போக்குவதையும், காசுக்கு வாக்குகளை விற்பதையும்  நையாண்டி செய்கிறது 

இணையத்தில் இந்தக் குறும்படத்தை பார்த்தவர்களில் தற்போதைய நிலவரமாக பத்து விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். விருப்பமின்மையை இதுவரை யாரும் தெரிவிக்காததை இந்தக் குறும்படத்திற்கான இணைய ஆர்வலர்களின் வரவேற்பாக கருதலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,112.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.