இந்த முறை பிக்பாஸ் வெளியேற்ற நபர் வனிதா என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கமல் என்ன தெரிவிக்கப் போகிறார் என்பதற்கு இரவு வரை காத்திருப்போம். 29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்ற நபர்களை பாதுகாக்க, பொதுமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை விஜய் தொலைக்காட்சி வழங்கியிருக்கிறது. நமது வாக்குகளை இரண்டு வழிகளில் நாம் செலுத்து முடியும். 1. நாம் வெளியேறக் கூடாது என்று விரும்பும் நபருக்கு தவறிய அழைப்பின் மூலம் வாக்கு அளிப்பது. 2. ஹாட்ஸ்டார் செயலி மூலம் வாக்களிப்பது. முந்தைய பருவங்களில் கூகுள் தேடல் மூலம் வாக்களிக்கும் வசதி இருந்தது. ஹாட்ஸ்டார் மூலமான வருமானத்திற்காக கூகுள் தேடல் வாக்களிப்பு முறையைத் தூக்கி விட்டனர் விஜய் தொலைக்காட்சியினர். தற்போது தேர்தல் முடிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு போல, பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்ற நபர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவும் கருத்து கணிப்பு நடத்தி வருகின்றன சில இணையத் தளங்கள். கடந்த முறை பாத்திமாபாபுதான் வெளியேற்ற படுவார் என்ற அந்த இணையத்தளங்களின் கருத்துக் கணிப்பு சரியாகவே இருந்தது. அதனாலேயே மோகன் வெளியேற்றப் படுவது போன்ற கமலின் நாடகம் பார்வையாளர்களால் நம்பப் பட்டது. ஆனால் கமல், இல்லை இவர் பாதுகாக்கப் பட்டவர் என்று தெரிவித்து நிகழ்ச்சியை பரபரப்பான எதிர்பார்ப்பில் திடீரென முடித்து விட்டார். கருத்து கருப்பு தெரிவிக்கிற, இன்றைய வெளியேற்ற நபர் வனிதா. அவர் 4.91 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று பொதுமக்கள் பாதுகாப்பில் கடைசி நபராக நிறுத்தப் பட்டுள்ளார். வனிதாவை கடைசி வரை வைத்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள் விஜய் தொலைக்காட்சியினர், அதற்கு பதிலாக மோகனை வெளியேற்றுவார்கள் என்று நம்பப்பட்ட நிலையில், நான்காம் இடத்தில் இருந்த மோகனை நேற்று பாதுகாத்து விட்ட நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போவது வனிதாவே என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இனி சண்டை போட யாருமே இருக்க மாட்டார்களே. ஒரு வேளை மீரா மிதுனை அடுத்த வனிதாவாக மாற்றி சண்டை போட வைப்பார்களோ என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,213.
இந்த முறை வனிதாதான் வெளியேறுவார் என்ற கணிப்பை, கடந்த நான்கு நாட்களாகவே அறிய முடிந்தது. ஏனென்றால் பாதுகாப்பு வாக்குகளை அதிகமாக 61.21 விழுக்காடுகள் பெற்று மதுமிதா இந்தக் கிழமையும் முதல் இடத்தில் உள்ளார். பாதுகாப்பில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். சரவணன் 21.41 விழுக்காட்டு வாக்குகளைப் பெறுகிறார். மூன்றாம் இடத்தில் 6.25 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று மீரா இடம் பெறுகிறார். நான்காவது இடத்தில் மோகன் 6.24 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நிற்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.