Show all

அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜியுடன் வாதாடிய தேவராஜனை, நடுவண் பாதுகாப்பு படை வெளியேற்றியது

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். இதையடுத்து 18 சட்;டமன்ற உறுப்பினர்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்து அறிவித்தார். முதல்வர் மாற்றம் கோருவது எப்படி கட்சித் தாவலாக முடியும் என்று தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதேபோல் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கோரி பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. 

இதனிடையே பன்னீர் உட்பட 11 சட்;டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது, 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் தெரிவிக்க வேண்டும் என தேவராஜன், தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜியுடன் வாதம் செய்தார். இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தேவராஜனை அறங்கூற்றுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். 

இதையாடுத்து, 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார். முன்னதாக பன்னீர் உட்பட 11 சட்;டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுவை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்த தீர்ப்பை தங்கதமிழ்ச் செல்வன் உள்நோக்கத்துடன் வழங்கப் பட்ட தீர்ப்பு என்று விமர்சித்ததாக இந்திரா பானர்ஜியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி, மனசாட்சிப்படியே தீர்ப்பளித்தோம் எனவும் தெரிவித்தார். 

மனசாட்சிப் படியானதுதானா என்பதை அடுத்து தரப் போகிற 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வைத்து மக்களே புரிந்து கொள்வார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,771.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.