Show all

சரவண பவன் உணவகத்திற்கு சீல் வைத்தது தமிழக அரசு

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு தமிழக அரசு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் பிரபல உணவகம் சரவண பவன் செயல்பட்டு வருகிறது. தொழில் உரிமம் மற்றும் வாகனங்கள் நிறுத்த இட வசதி இல்லை என்று சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

     இந்நிலையில், சென்னை மாநகராட்சி உதவி ஆணையரின் உத்தரவின் பேரில், உதவி வருவாய்த்துறை அலுவலர் மற்றும் உரிம ஆய்வாளர்கள் இன்று பிற்பகலில் சரவண பவன் உணவகத்திற்கு வந்தனர். திடீரென உணவகத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சென்னையில் மட்டும் தற்போது வரை மொத்தம் ஒன்பது சரவண பவன் உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.