பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியின் பலன்களை உடனடியாக
எதிர்பார்க்க முடியாது என்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண்
ஜெட்லி பேசினார். நாடாளுமன்ற
வரவு-செலவு கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர்
பிரணாப் முகர்ஜி இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். இதையடுத்து
2016-2017 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்தார். நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழு விவரங்கள் இந்த ஆய்வு அறிக்கையில்
இடம் பெற்றுள்ளன. ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளதன் முக்கிய அம்சங்கள்
வருமாறு:- 2016-17
ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7.0 விழுக்காடாக இருக்கும். 2017-18 ஆண்டிற்கான பொருளாதார
வளர்ச்சி 6.75விழுக்காடு முதல் 7.50விழுக்காட்டுக்குள் இருக்கும். உலகில் வேகமாக வளரும்
பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தக்க வைக்கும். 2016-17-இல் தொழில்துறை வளர்ச்சி
5.2விழுக்காடாக குறையும். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களுக்கான பலன்களை
உடனடியாக எதிர்பார்க்க முடியாது. விவசாயத்துறை
2016-17 ஆண்டில் சுமார் 4.1விழுக்காடு வளர்ச்சி காணும். 2016-17 ஆம் ஆண்டில் தொழில்துறை
வளர்ச்சி 5.2விழுக்காடாகக் குறையும். தொழிலாளர்
வரி தொடர்பான சீர்திருத்தங்களை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி,
தோல் தொழில்துறையில் உலக அளவில் போட்டியிட முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



