Show all

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்ற செவ்வாய் கிழமை போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது காவல்துறை மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். 

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இந்த அரசாணை வெளியிட்ட காரணத்தால் இன்றுடன் ஸ்டெர்லைட் மொத்தமாக மூடப்படுகிறது. அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு முத்திரையிட மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துள்ளார்.

இதனை முடிவான முடிவு என்று நடுவண் அரசும், உச்ச அறங்கூற்று மன்றமும் உறுதி செய்த பிறகுதான் நாம் நம்பிக்கை கொள்ள முடியும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.