Show all

கீழடி 4வதுகட்ட அகழாய்வில் தங்க நகைகள் கண்டெடுப்பு! தமிழர் தொன்மை பெருமை வானளாவ உயரும்

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு கீழடியில் நடந்து வருகிறது. கடந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட உறை கிணற்றை விட, அதிக சுற்றளவு கொண்ட, ஆறு அடுக்குகள் உறை கிணறு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய மூன்று அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறுகளை விட, இதன் அகலம் அதிகமாகவும், உயரம் குறைவாகவும் உள்ளது. இந்த உறைகிணறு ஆற்றின் அருகாமையில் இருந்திருக்க கூடும்.

அகவை முதிர்ந்த பெண்கள் அணியும் தங்க தொங்கட்டான், தங்க காசுகள் உள்ளிட்ட, ஈராயிரம் பொருட்கள் தற்போதைய அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வுக்கு பின், இந்த பொருட்கள் எந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது, என்று அறியப் படும் போது தமிழர் பெருமை வானளாவ உயரும் என்று ஆய்வறிஞர்கள் தெரிவித்தார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.