Show all

தினகரன் எடப்பாடி இணைவுக்கான சூசகம் உள்ளீடாக! இடைத்தேர்தலுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் கூடாரம் காணாமல் போய்விடும்

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் இராகிநகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது பன்னீர் செல்வம் கூடாரம் இல்லாமல் போய்விடும் என்று தினகரன் கூறி ஒரு சூட்சம செய்தியை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்- தன்னை முதல்வர் ஆக்கிய, தனக்கு ஆதரவுத்தளத்தில் இருந்த, பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தினகரனைக் கழட்டி விட்டு விட்டு, 

தனக்கு எதிர்த்தளத்தில் இருந்த, அதிமுகவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய, வெறுமனே பதினோரு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பன்னீர் செல்வத்தை இணைத்துக் கொண்டது, சசிகலா பெயரைச் சொன்னால் தமிழகத்தில் அதிமுகவிற்கு செல்வாக்கு சரிந்து விடும் என்கிற பாஜகவின் கண்டுபிடிப்பை நம்பி ஏமாந்த கதைதான். 

தினகரனின் இராகிநகர் வெற்றிக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணி, சசிகலாவை தமிழக மக்கள் செயலலிதாவின் தோழியாகவே, தொடர்ந்தும் அங்கிகரிக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டார். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் தினகரன் அணிக்கு மக்கள் வெற்றியைத் தேடித் தரும் பட்சத்தில்;;, தினகரனின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தினகரனோடு இணையவும், மக்கள் செல்வாக்கு இல்லாத செல்லாக் காசான பன்னீர் அணியைக் கழட்டி விடவும் தயாராகி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். முதல்வர் பதவியில் இல்லாத விரக்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். வரக்கூடிய திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் இராகிநகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூடாரம் இல்லாமல் போய்விடும் என்று தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் கட்டம் கட்டி பேசுவதில் இருந்து பழனிச்சாமியின் முயற்சி தினகரனுக்கு தெரிந்துவிட்டதோடு அதற்கு தயாராகவும் இருக்கிறார் என்பதே சூட்சம செய்தியாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.