23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கப் போகிறார்கள். இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்க அடிப்படை காரணம், ஜெயாதொலைக்காட்சி இவர்களின் கையை விட்டு போனதுதான். ஜெயலலிதா இருந்தவரை எல்லோருமே இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பை தான் தங்கள் கட்சிக்கு பலமாக, உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் அவர் மறைந்தபிறகு நடைபெற்ற பல்வேறு சூழல் காரணமாக அதிமுகவை, பாஜகவின் துணையோடு முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து மீட்க முடிந்ததே யன்றி தினகரனின் வசம் உள்ள ஜெயாதொலைக்காட்சியை மீட்க முடியாமல் போய்விட்டது. ஆளுகிற பொறுப்பை அவர்கள் பறித்தாலும், மக்கள் வசமான கட்சியையும் மீட்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதனால் ஆட்சி கிடைத்த முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்த அதிமுகவுக்கு, பலம் வாய்ந்த கட்சிக்கு என்று தனியாக தெலைக்காட்சி ஒளிபரப்பு இல்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுமே தங்களுக்கென்றும், தங்கள் கட்சியின் செய்தி, கொள்கைகளை பரப்புவதற்கும் தனியாகவே தொலைக்காட்சி தொடங்கி செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, ஆட்சியைத் தக்கவைத்து அதன் மூலமான கட்சிக்கு ஒருதொலைக்காட்சிஇல்லாதது ஒரு பெரிய குறைதான். அதற்காகத்தான் தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டு புதிதாக ஆளும் அதிமுகவுக்கு என்று ஒரு சேனலை தொடங்கியுள்ளார்கள். இது ஒரு செய்தி ஒளிபரப்பு என்று கூறப்படுகிறது. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக அனைத்து வேலைகளும் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பெயர் கூட வைத்துவிட்டார்கள். நியூஸ்ஜெ, என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய தொலைக்காட்சி சோதனை ஓட்டம் வருகிற புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,904.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



