27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா? என்ற தலைப்பில் இயக்குனர் அமீர், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ஞானதேசிகன், செ.கு.தமிழரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக டி.கே.எஸ். இளங்கோவன், செம்மலை, மற்றும் பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேச்சுக்கு பாஜகவினர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனையின் போது பொருட்கள் சேதம் அடைந்ததாகவும், இதையடுத்து எஸ்.என்.ஆர் நிர்வாகம் சார்பில் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறி, பாஜகவினரின் நெருக்குதலில், புதிய தலைமுறை நிறுவனம், அதன் கோவை செய்தியாளர் சுரேஷ், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது 505,153ஏ,3(1) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குநர் அமீரைத் தாக்குவதற்கு பாஜகவினர் திரண்டு வழியில் காத்திருந்தனர். கோவையில் இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தனியரசின் கார் திரும்பிச் செல்லும் போது, அமீர் அந்தக் காரில் இருப்பதாகக் கருதி, மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்து வந்து காவல் துறையில் புகார் செய்ததால் பாஜகவினர்களில், 8 பேர் மீது 506(2),294(டீ),341,147,148, ஆகிய பிரிவின் கீழ் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



