Show all

இன்று நாம் தமிழர்கட்சி அந்த இடத்திற்கு! தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நேற்று ஸ்டாலின் குற்றச்சாட்டு

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதேநேரம், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு ஏற்கனவே, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சின்னத்தில்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இதை ஒரு காரணமாக ஏற்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேசிய கட்சிகளுக்குதான் ஒரே மாதிரி சின்னங்கள் ஒதுக்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் மிதிவண்டி சின்னத்தில் மாநில கட்சிகள் போட்டியிட முடிகிறதே என்று இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்

இன்று நாம் தமிழர்கட்சி அந்த இடத்திற்கு! தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நேற்று ஸ்டாலின் குற்றச்சாட்டு. நாளை நாங்கள் ஏதும் குற்றச்சாட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளும் வகையில், தேர்தல் நல்ல முறையில் நடந்தால் சரிதான் என்கிறார்கள் மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.