11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திசையன்விளையில் விவி பொறியியல் கல்லூரி 8வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கினார். மக்கள் வாழ்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் திருக்குறளில் உள்ளதாக அவர் பெருமிதப் பட்டார். மேலும் உத்தரகாண்டில் பிறந்திருந்தாலும் நான் தமிழன்னையின் புதல்வன் என்று தருண்விஜய் பேசியுள்ளார். எதிரிகள் கூடாரத்தில் இருந்த போதும், தமிழ்ப் பண்பாட்டில், ஆர;வமும், திருக்குறள் மீது தணியாத தாகமும் உடையவராக இருக்கிறார் தருண்விஜய். பாஜகவில், இருந்த போதும், தமிழிசை, பொன்.இராமச்சந்திரன், எச்.இராஜா போன்ற தமிழர்கள் ஒதுக்கிவைத்திருக்கிற அருவருப்புப் பட்டியலில் இல்லாமல், தமிழர்கள் பாராட்டிக் கொள்ள வேண்டிய நட்புத் தளத்தில் இருக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,707
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



