Show all

செயல் அதிகாரி உறுதி! ஏர்செல் சேவை நாளை காலைக்குள் சீராகும்

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஏர்செல் சேவை  வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள்  சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், ஏர்செல் நிறுவனத்தின் செல்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்தின் செல்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று வியாழனன்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் ஏர்செல் சேவை இன்றும் முடங்கியது. இதன் காரணமாக பொது  மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர்செல் சேவை  வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள்  சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழகத்தில் ஏர்செல் செல்பேசி சேவையானது 60 விழுக்காடு சரி செய்யப்பட்டுள்ளது. வியாழன் நள்ளிரவுக்குள் செல்பேசி சேவை முழுமையாக சீர் செய்யப்படும். தொழில்நுட்ப சேவை பொறியாளர்கள் ஆயிரம் பேர் சைகைச் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலைக்குள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏர்செல் சேவை சீராகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,707 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.