21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் தொடர்வண்டி பயணச்;சீட்டு கொடுக்குமிடம், இணையதளம் செயல்படாது என்று தெற்கு தொடர்வண்டித் துறை அறிவித்துள்ளது. கணிணி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும் பயணிகள் முன்கூட்டியே பயணச் சீட்டு முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெற்கு தொடர்வண்டித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழத்தின் அனைத்து தொடர்வண்டி நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரை பயணச்சீட்டு வழங்கல், இணையதளம் செயல்படாது என்று தெற்கு தொடர்வண்டித் துறை கூறியுள்ளது. இதே போன்று நாளை இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் இணையதளம் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. கணிணிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. மேலும் கணிணி களவாணிகளிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணிணியில் சேர்க்கும் பணி நடைபெறஉள்ளதால் சேவையில் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,687
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



