22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குவைத் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காக ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் அந்த நாட்டில் தங்கும் காலம் முடிந்தும், சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இந்த நபர்களை அரசு கண்டு கொண்டால், அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்குவர். இந்நிலையில் சட்டவிரோத வெளிநாட்டினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியத் தூதரகத்தில் நாள்தோறும் இந்தியர்கள் குவிந்து வருகின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் தூதரக அதிகாரிகள் திணறி வருகின்றனர். சட்டவிரோத நபர்கள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்குள், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றால், அங்கிருந்து பத்திரமாக இந்தியா அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,688
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



