08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பனிரெண்டாம் வகுப்பில் தாங்கள் விரும்பிய பாடப் பிரிவு வேண்டுமென்றால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமது பிள்ளைகள் என்ன மதிப்பெண் எடுக்கப் போகிறார்களோ என்ற ஆர்வத்;;;;தோடு காத்திருக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12ஆயிரத்து 337பள்ளிகளில் இருந்து 10லட்சத்து ஆயிரத்து 140 மாணவ மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. இந்நிலையில் இத்தேர்வின் முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. அண்மையில் இதுகுறித்து பேட்டியளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறினார். மேலும் மதிப்பெண்களை மீண்டும் சரிப்பார்த்து இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in www.dge.tn.gov.in ஆகிய அரசு இணையதளங்களிலும் மற்றும் சில தனியார் இணையதளங்களிலும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை மாணவ மாணவிகள் மட்டுமல்லாது, தனிதேர்வர்களாக 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



