09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தப் படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்த 3 மாவட்டங்களும் துண்டிக்கப்பட்டது போன்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை! என்று கீச்சில் பதிவிட்டுள்ளார் கமல். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



