Show all

திரைப்பட நடிகை என்பதால், மதுமிதா தமிழ்க் கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதாம்! பிக்பாஸ் போட்டியாளர் பெரும்பாலோர் எண்ணம்.

தமிழ்ப்பெண்கள் நடவடிக்கை, தமிழ்பெண்கள் ஆடையலங்காரம், தமிழ்ப் பெண்கள் உடலசைவு மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் தமிழ்மக்களிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதை தமிழ்ப் பண்பாடு என்றும் தமிழ்க் கலாச்சாரம் என்றும் பேணி வருகிறோம். பெரும்பாலும் குடும்பத்திற்குள்ளாகவே அது கட்டுப் படுத்தப்பட்டுவிடும். வெளியில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பாக இருப்பது தமிழ் இலக்கியங்களே. 

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இது என்னுடைய குழந்தை என்று ஒரு பொருளை தன்னுடைய குழந்தையாக பாவித்து விளையாடுவது, ஒன்று அறியா அகவை குழந்தைகளாக இருக்கக் கூடும். அல்லது மனநலம் பாதிக்கப் பட்ட தாயாக இருக்கும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் இன்னொரு போட்டியாளருக்கும் தனக்கும் பிறந்த குழந்தை என்று விளையாடியது மதுமிதாவை பாதித்திருக்கிறது. 


மதுமிதா நேரடியாக சம்பந்தப்பட்ட போட்டியாளரிடமோ, ஆண் போட்டியாளர்களிடமோ அதைக் குற்றச்சாட்டாக பதியவில்லை. ஆனால் பாத்திமாபாபுவிடம் அதை பெரிதாக வெளிப்படுத்த வேண்டாம் என்று சொல்லப் போய், சம்பந்தப்பட்ட அந்த போட்டியாளரும் அவருக்குத் துணையாக இன்னும் இரு பெண்களும், மதுமிதாவிடம் கோபப்பட்டு கேள்வி எழுப்ப, தமிழ்ப் பெண்- பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்தாரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்- தமிழ் கலாச்சாரம்- என்று மதுமிதா விளக்கம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். சம்பந்தப்பட்ட போட்டியாளரும், அவரைத் தூண்டி விட்ட போட்டியாளர்களும், அப்படியா சரிசரி என்று போயிருக்கலாம். 

அவர்கள் பெரிது படுத்தப் போய், பாத்திமாபாபு ஒருபடி மேலே சென்று, அந்தச் சம்பந்தப் பட்ட போட்டியாளர் ஒரு பொருளை தனக்கும் இன்னொரு ஆண் போட்டியாளருக்குமான  குழந்தையாக பாவித்து விளையாடியது, விளையாட்டா? இல்லை கலாச்சார சீரழிவா என்று கருத்துக் கணிப்பு நடத்தத் தொடங்கி விட்டார். அப்போதும் கூட மதுமிதா அது ஒரு தவிர்த்திருந்திருக்க வேண்டிய நடவடிக்கை என்று பார்த்தாரேயொழிய கலாச்சார சீரழிவு என்பதாக முன்மொழிய வில்லை. 

அவர்களாக அசிங்கப் படுத்திக் கொண்டதற்கும் அழுது புலம்பியதற்கும் மதுமிதா பொறுப்பாக மாட்டார். ஆனால் சகப் போட்டியாளர் அனைவருமே நீயும் ஒரு நடிகைதானே? அதெப்படி தமிழ்ப்பெண், தமிழ்க் கலாச்சாரம் என்றெல்லாம் பேசலாம் என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையே கேவலப்படுத்திக் கொண்டார்கள். சம்பந்தப் பட்ட பெண்ணும், அவருக்கு ஒத்துஊதிய பெண்களும் தங்களை அசிங்கப் படுத்திக் கொண்டார்கள் என்றால், ஒட்டு மொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும், தமிழ்த் திரைத்துறை- பண்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதாகவே காட்டிக் கொண்டார்கள்.  

மதுமிதா! நீங்கள் தாராளமாக தமிழ்ப்பண்பாடு, தமிழ்கலாச்சாரம் குறித்தெல்லாம் பேசலாம்; தமிழ் மக்கள் என்றென்றும் துணையிருப்பார்கள். வாழ்த்துக்கள் மதுமிதா!   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,199.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.