25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திருவரங்கம் அரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராசன் நரசிம்ம26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ன் என்பவர் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதும், பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை என்பதும், கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பவை குற்றச்சாட்டுகள். இது குறித்து காவல் துறை மற்றும் தமிழகஅரசின் அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கை அறங்கூற்றுவர்கள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிலை கடத்தல் பிரிவு தலைவர் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில்தான் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்பிணை கோரி மனு பதிகை செய்தார். தனது முன்பிணை மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்பிணை கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்அறங்கூற்றுமன்றம் வேணு சீனிவாசனை 6 கிழமை காலத்திற்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



