கொரோனாவிடம், நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிரமம் இல்லை. குடிபோதையில் நம் கணவர் கொரோனாவை வாங்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது என்பதே குடிகார குடிமகன்களின் குடும்பத்தாருக்குக் கவலையாக இருந்தது. நல்லவேளை முதல்வரும் இதை உணர்ந்து டாஸ்மாக்கையும் மூட உத்தரவிட்டிருப்பது பாராட்டிற்கு உரியது. 03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மழலையர், தொடக்க பள்ளிகளுக்கு இந்த மாத இறுதிவரை விடுமுறை விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். அதேபோல் அண்டை மாநில எல்லைகளில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிகவளாகங்கள் ஆகியவற்றை மூடவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் இன்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், அனைத்து பள்ளிகள், கல்லூரிகளையும் மாத இறுதிவரை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளையும் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரை அரங்குகள், உயிரியல் பூங்காங்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு அரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், குடிப்பகங்கள் ஆகியவையும் மூடப்படும். வணிக கண்காட்சி, விளையாட்டு போட்டிகள், கோடைகால பயிற்சிகளுக்கும் மாதஇறுதி வரை அனுமதி இல்லை. அதேபோல் மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும் மாதஇறுதி வரை அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பால்வாடி மையங்களும் மாதஇறுதி வரை மூடப்படுவதால் 15 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் அந்த குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எல்லாவற்றும் மேலாக, நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிரமம் இல்லை. குடிபோதையில் நம் கணவர் கொரோனாவை வாங்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது என்பதே குடிகார குடிமகனின் குடும்பத்தாருக்கு கவலையாக இருந்தது. நல்லவேளை முதல்வரும் இதை உணர்ந்து டாஸ்மாக்கையும் மூட உத்தரவிட்டிருப்பது பாராட்டிற்கு உரியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



