Show all

சூர்யா! வல்வில் ஓரியாக நடுவண், மாநில அரசுகளுக்கு எதிராக எய்திய அம்பு. வீழுமா புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு வழக்கம் போல பாஜக தமிழக சில்லுவண்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யாவிற்கான ஆதரவு இணையத்தில் நிரம்பி வழிகிறது.

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சூர்யா, நேற்று சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டபோது புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும், இந்த கல்விக்கொள்கையில் பொருந்தாத அம்சங்களை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு, நுழைவுத்தேர்வு ஆகியவைகளுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் இன்னும் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வல்வில் ஓரியைப் போல வலிமையான அம்புகளை ஒரே சமயத்தில் மாநில அரசின் மீதும், நடுவண் அரசின் மீதும் எய்தினார் சூர்யா. தரப்படுத்தப் படாத மாநிலப் பள்ளிகள், தரமானவர்களுக்கே கல்வி என்பதாக நடுவண் அரசின் தேர்வுகள் என்று ஒற்றை அம்பில் இரண்டு அரசுகளையும் வீழ்த்தினார் சூர்யா. இந்த நிலையில் சூர்யாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு குவிந்து வருகிறது. 

அனைவருக்கும், தரமான மற்றும் சரி சமமாக கல்வி தராமல் தகுதித்தேர்வு அனைவருக்கும் ஒரே மாதிரி என்றால் எப்படி? மூன்று அகவை மாணவன் எப்படி மும்மொழிகளில் படிக்க முடியும்? எனவும் சூர்யா விமர்சித்திருந்தார். 

சூர்யாவின் இந்தப்பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து சூர்யா அரசுக்கெதிராக கேட்ட கேள்விகளை இணையம் வழியாக பாராட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் தமிழக பாஜக சில்லுவண்டுகள், வழக்கம் போல, அறிவுக்கும் இயல்புக்கும் ஒவ்வாத எதிர் நிலையை முன்னெடுத்து வருகின்றன. அவர்களின் ஒவ்வொரு எதிர்நிலைக்கும் தெளிவான பதில்களை இணைய ஆர்வலர்கள் பதிவிட்டு வருகிறார்கள். 

எடுத்துக்காட்டாக: கிராமப்புற இரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்கள் என்று தமிழிசை அம்மாம்பித் தனமாக பேசியுள்ள பேச்சுக்கு-

சென்னையிலேயே வரதராஜ திரையரங்கில், ரூ.110க்கும் மாயஜாலில் ரூ.190க்கும் சூர்யா படம் மட்டுமல்ல எந்தப் படமும் பார்க்க முடியும். சேலத்தில் ரூ.50க்கும்  கள்ளக்குறிச்சியில் ரூ.10க்கும் பார்க்க முடியும். தமிழிசை எந்த நாட்டில் இருக்கிறார்? என்று இணைய ஆர்வலர்கள் கலாய்த்திருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,215.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.