Show all

கமலின் புதியபடம், தலைவன் இருக்கிறான்!

தலைவன் இருக்கின்றான் கமலின் கனவுப்படங்களில் ஒன்று. இந்திய அரசியல், நிழல் உலகத்துடன் எப்படி பிணைக்கப்பட்டிருக்கிறது என்றும், பணம் அரசியலுக்குள் எப்படி வருகிறது என்பதை மையமாக கொண்ட திகில் கதை தான் தலைவன் இருக்கிறான். இப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க வேண்டியதாம்.

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பிறகு அவர் நடிப்பதாக இருந்த படங்கள், அப்படி அப்படியே நின்று கொண்டு இருக்கின்றன. 

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வேறு எந்த படங்களும் இது வரை வெளியீடு ஆகவில்லை. அவர் நடிப்பில் உருவாக இருந்த சபாஷ் நாயுடு படம் என்ன ஆனது ஒன்றும் தெரியவில்லை. சங்கர் இயக்கத்தில் மிகப்பிரமண்டமாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 படம் சங்கரின் 24ம் புலிகேசி படப் பிரச்சனைகளால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சங்கர் தற்போது விஜய் நடிக்கவிருக்கும் தன் அடுத்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியன் 2 படமும் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. மேலும் கமல் தேவர்மகன் எடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் அப்படம் தொடங்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியவில்லை.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் “கடாரம் கொண்டான்”. இந்தக் கிழமை வெளியாக உள்ளது. தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தினை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

முதலில் இப்படத்தில் கமலஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் கமல் நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படி இத்தனை படங்கள் அப்படி அப்படியே துண்டாக நின்றிருக்க கமல் ஏ ஆர் ரகுமானுடன் இணையும் அடுத்த படத்தை அறிவித்துள்ளார். தலைவன் இருக்கிறான் படத்திற்கு கமலுடன் இணைவதாக ஏ ஆர் ரகுமான் தன் கீச்சுப் பக்கத்தில் தெரிவிக்க கமலும் அதனை பகிர்ந்து உறுதி செய்துள்ளார். இணையத்தில் அதிகமாக பகிரப் பட்டும்  பேசப்பட்டும் வருகிறது.

தலைவன் இருக்கின்றான் படத்தலைப்பை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ராஜ்கமல் நிறுவனம் வாங்கி வைத்திருக்கிறது. இப்படத்தில் கமல் எதிரித்தனம் கலந்த வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் நிறைய முதன்மைக் கதாப்பாத்திரங்களைக் கொண்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,215.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.