Show all

எச்.ராஜா தெரிவிக்கிறார்! ஹிந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமாம்.

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதென, தெரிவித்துள்ள எச்.ராஜா- ஹிந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 


30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதென, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எச்.ராஜா, புதிய கல்விக்கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழி, என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எவ்வாறு ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக அமையும், என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஹிந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், எச்.ராஜா தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,214.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.