பனிரெண்டு ஆண்டுகளாக படித்து பெற்ற மதிப்பெண்கள் மாணவ, மாணவியருக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதாயம். நம்பிக்கையின் வெளிச்சம். அடுத்த கட்ட நகர்வான மருத்துவக் கல்விக்கு அது பயன்விடவில்லை யென்றால். அந்த பனிரெண்டு ஆண்டு கல்வி எதற்கு? நீட் என்ற ஒற்றைத் தேர்வில் ஒரு மாணவியின் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கியிருக்கிறது அடாவடி நடுவண் அரசு. 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மருத்துவமனைகளையும், தமிழக மருத்துவக் கல்லூரிகளையும் தங்கள் வாக்கு வங்கியான வட மாநில மக்களுக்கு பிடுங்கிக் கொடுக்கும் வகைக்கான ஒரு தேர்வை வட இந்திய கட்சியான பாஜக முன்னெடுத்திருக்கிறது. அதை தட்டிக் கேட்கும் மாநில அரசும் நமக்கு இல்லை. இந்த நிலையில் உயிர்க்கொல்லி நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில், செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுசிறி என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



