Show all

பொசுங்க வேண்டியது நீயல்ல தாயே! நீட் அல்லவா? நீட் உயிர்க் கொல்லிக்கு இன்னொரு தமிழக மாணவி தீக்கிரை

தமிழகம் கண்ணீரில்! பனிரெண்டு ஆண்டுகளாக படித்து பெற்ற மதிப்பெண்கள் மாணவ, மாணவியருக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதாயம். நம்பிக்கையின் வெளிச்சம். அடுத்த கட்ட நகர்வான மருத்துவக் கல்விக்கு அது பயன்விடவில்லை யென்றால். அந்த பனிரெண்டு ஆண்டு கல்வி எதற்கு? நீட் என்ற ஒற்றைத் தேர்வில் இரண்டு மாணவிகளின் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கியிருக்கிறது அடாவடி நடுவண் அரசு.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருப்பூர் ரிதுசிறியைத் தொடர்ந்து, பட்டுகோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மிக மிக அதிகமான மருத்துவமனைகளையும், மருத்துவக் கல்லூரிகளையும் கொண்ட தமிழகத்தின் கல்வி உரிமையை பறிக்கும் வகையாக, கொண்டு வரப்பட்டதுதான் வடஇந்திய வாக்கு வங்கி கட்சி பாஜகவின் நீட். 
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும் பல போராட்டங்கள் நடந்திருந்தாலும் இறுதியில் வேறு வழியன்றி நீட்டை கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டு அதனை எழுதி வருகிறார்கள் தமிழக மாணவர்கள். இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத்து இன்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுசிறி வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரிதுசிறி 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. 

இந்தத் துயர சம்பவத்தின் வேதனை தொடங்கிய அடுத்த அரை மணி நேரத்தில், மற்றொரு தற்கொலை சம்பவம் உயிர்க்கொல்லி நீட்டால் தமிழகத்தில் நடந்துள்ளது தமிழக மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வை எழுதியிருந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், அத்தேர்வில் தோல்வியுற்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகமே வேண்டாம் என அலறிய நீட் தேர்வால் தற்போது அடுத்தடுத்து இரு மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.