முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார். அது தானாக நடைமுறைக்கு வந்து வெற்றி ஈட்டி வருகிறது. 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஒரு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பரிந்துரைத்திருந்தார். முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருந்ததாவது:- ‘15 நாட்களில் முடிந்து விடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தயங்கியவர் நிறைய. இப்போது உறுதியாகப் போக நினைக்கிறார்கள். நலமாகவே இருக்கும் அவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கும் அதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சென்னையில் கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களைக் கண்டறியவும் விரைவில் சரி செய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து. சென்னையில் 12நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சேரனின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. சென்னைக்கு ஊரடங்கு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. முன்பு சென்னையில் கொரோனா பாதிப்பு 80 விழுக்காடாகவும், பிற மாவட்டங்களில 20 விழுக்காடகவும் இருந்தது. ஆனால் இந்த ஊரடங்கு அறிவிப்பு வெளியான பின்னர் பிற பகுதிகளில் 40 விழுக்காடு ஆகவும், சென்னையில் 60 விழுக்கடாகவும் மாறி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஒட்டுமொத்தமாக 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 1257 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆக இருந்தனர். அதேபோல் அதிகபட்ச பாதிப்புகள் என்பது சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தான் இருந்தது. மற்ற பகுதிகளில் பாதிப்பு சொற்ப எண்ணிக்கையில் தான் இருந்தது. சென்னைக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பல்லாயிரம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டு சொந்த ஊர் வர தொடங்கினர். சேரனின் அலோசனை தானாக நடந்தது. மின்அனுமதி வாங்கியும் மின்அனுமதி இல்லாமலும் பலர் மற்ற மாவட்டங்களுக்கு பாய்ந்தோடினர். அப்படி வந்தவர்களை எந்த மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்காமல் அப்படியே வீட்டிற்குள் விடவில்லை. ஏன் பக்கத்து வீட்டுக்கார்கள் கூட இருக்கவிடவில்லை என்பது நிதர்சமான உண்மை. திருட்டுத்தனமாக வந்தவர்கள் ஆக இருந்தாலும், மின்அனுமதி வாங்கி வந்தவர்களாக இருந்தாலும் அத்தனை பேரையும் தூக்கி கொண்டு சென்றது அந்தந்த மாவட்ட நலங்குத்துறை. சென்னையில் இருந்து வந்துள்ளார் என்ற தகவல்கள் கிடைத்த உடனேயே அவர்களை தேடி கண்டுபிடித்து அவரையும் அவரை சார்ந்தோரையும் சோதிக்கும் பணி தீவிரமானது. தற்போது பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பலரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெறும் ஆறு நாளில் 17ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது. அதாவது அன்றாடம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் இந்த ஆறு நாளில் சுமார் 300 பேர் இறந்துள்ளார்கள். கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் முழு ஊரடங்கால் (என்பதை விட பலர் சொந்த ஊருக்குத் திரும்பியதால்) கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரம் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகமான பாதிப்பு தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 41,172 பேரும், செங்கல்பட்டில் 3,745 பேரும், திருவள்ளூரில் 1922 பேரும், திருவள்ளூரில் 2534 பேரும், காஞ்சிபுரத்தில் 1159 பேரும், திருவண்ணாமலையில் 1060 பேரும், கடலூரில் 765 பேரும், மதுரையில் 705 பேரும், திருநெல்வேலியில் 640 பேரும், தூத்துக்குடியில் 577 பேரும், விழுப்புரத்தில் 581 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும், சேலத்தில் 335 பேரும், அரியலூரில் 420 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 17683 பேரும், செங்கல்பட்டில் 1762 பேரும், திருவள்ளூரில் 1257 பேரும், காஞ்சிபுரத்தில் 561 பேரும், திருவண்ணாமலையில் 598 பேரும் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் 316 பேரும், தூத்துக்குடியில் 207 பேரும், திருநெல்வேலியில் 208 பேரும் வேலூரில் 368பேரும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். மேலே சொன்ன மாவட்டங்களில் கொரோனா கடந்த ஒரு வாரத்தில மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் பெரும்பாலும் சென்னையிலிருந்து திரும்பியவர்களே. அவர்கள் ஒருவர் கூட விடாமல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிற நிலையில், விரைவில் அங்கு குணமளிப்பும் அதிகரித்து தமிழகம் கொரோனா எதிர்ப்பில் வெற்றிவாகை சூடுவதற்கான விடிவெள்ளி தெரிகிறது. நம்புவோமாக. அரசுப் பணியாளர்களின் அயராத பணியினை அண்ணாந்து வியப்போமாக.
மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்கள் உயிரோடு வைத்துக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



