Show all

பதினாறாவது நாளாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது பெட்ரோல், டீசல்! கொரோனா படுத்தும் பாட்டில், மக்கள் இதற்கும் அல்லாட்டம்

சென்னையில் தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. 

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடலாம் பாடலாம் என்று தன்னினைவு இல்லாமல் ஆடுவர்கள் கதைத் தலைவன் எம்ஜியாரும், மஞ்சுளாவும் நினைத்ததை முடிப்பவன் படத்தில். நடுவண் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இங்கே இந்தியாவில் மதிமயங்கி வரியை உயர்த்திக் கொண்டும், விலையை உயர்த்திக் கொண்டும் ஒருவர் மீது ஒருவர் சார்ந்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

மாதத்திற்கு ஒருமுறை இருமுறை என்று விலை நிர்ணய முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. பாஜக ஆட்சியில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.82.87ஆக விற்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.30 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

இப்போதைக்கு இந்தப் பாடலை கொரோனாவுடன் நாமும் பாடி, கொரோனாவுடன் மட்டுமல்லாமல் விலையேற்றங்களோடும் வாழப் பழகுவோம்.
படம்: நினைத்ததை முடிப்பவன். தமிழ்த் தொடராண்டு 5077 (1975)
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்: வாலி

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஆடலாம் பாடலாம்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப் பூவைப் போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
ஆ.ஆ..ஆ...ஆஆ...
சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தைப் போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னைப் பின்னிக் கொள்ளட்டும்
கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னைப் பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ....
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
பாடலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.