தற்போது ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பாஜக, மாநில ஆட்சிகளைக் கவிழ்க்க, மாநிலங்களுக்குத் தக்கவாறு பல்வேறு வியூங்களை வகுத்து சாதிப்பது வழக்கம். அந்த வகையாக தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பயன்படுத்திய வியூகம் இணையத்தின் பேசு பொருளாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. 10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் ஒன்றிய ஆட்சியில் இருந்த காலத்தில்- தமிழக ஆட்சியை, சட்ட விதிஎண் 356ஐ பயன்படுத்தி பலமுறை கலைத்திருக்கிறது. அப்போதெல்லாம் கலைக்கப்பட்ட ஆட்சிக்கே தமிழக மக்கள் ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்துவார்கள். தற்போது ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பாஜக, மாநில ஆட்சிகளைக் கவிழ்க்க, மாநிலங்களுக்குத் தக்கவாறு பல்வேறு வியூங்களை வகுத்து சாதிப்பது வழக்கம். அந்த வகையாக தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பயன்படுத்திய வியூகம் இணையத்தின் பேசு பொருளாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. புதுவை சட்டமன்றத்தில் 3 நியமன உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வைத்தே முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரசுக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவும், எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரசுக்கு 7; அதிமுகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பகுதி என்பதால் அங்கு 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க முடியும். இந்த 3 பேரையும் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்திருந்தார். இந்த 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவை சேர்ந்தவர்கள். பொதுவாக நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை உண்டா? என்கிற சர்ச்சை இன்னமும் முடியவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களும் பதிகை செய்யப்பட்டுள்ளன. ஆகையால் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டா? இல்லையா? என்கிற பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமை இல்லை என முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் பேரவைத்தலைவர் இதை ஏற்கமறுத்துவிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் பலம் 14 ஆகவும் ஆளும் காங்கிரசுக்கான பலம் 12 ஆகவும் இருந்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு பதவிவிலகிட உரிய கடிதத்தை துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் நாராயணசாமி கொடுத்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.