கொரோனா பாதிப்பு வளர்ந்து கொண்டே போகிறது. ஊரடங்கு தளர்ந்து கொண்டே வருகிறது. இரண்டுக்குமான பட்டியலை அரசு வெளியிட்டு வருகிறது. நாளை முதல் 34வகை வணிக நிறுவனங்களுக்கு ஊரடங்கு இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 7,204. 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கொரோனா நுண்ணுயிரித் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே நிலையில் குணமளித்தலும் வளர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வும் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று என்பதற்கான பட்டியல் இதோ: 1. சென்னை 3839 2. கடலூர் 395 3. திருவள்ளூர் 337 4. விழுப்புரம் 299 5. அரியலூர் 275 6. செங்கல்பட்டு 267 7. கோயம்புத்தூர் 146 8. காஞ்சிபுரம் 122 9. மதுரை 117 10. திருப்பூர் 114 11. திண்டுக்கல் 108 12. பெரம்பலூர் 104 13. திருநெல்வேலி 90 14. திருவண்ணாமலை 82 15. நாமக்கல் 77 16. ஈரோடு 70 17. ராணிப்பேட்டை 66 18. தஞ்சாவூர் 66 19. திருச்சி 65 20. கள்ளக்குறிச்சி 59 21. தேனி 59 22. தென்காசி 52 23. கரூர் 48 24. நாகப்பட்டினம் 45 25. விருதுநகர் 39 26. சேலம் 35 27. திருவாரூர் 32 28. வேலூர் 32 29. தூத்துக்குடி 30 30. திருப்பத்தூர் 28 31. ராமநாதபுரம் 26 32. கன்னியாகுமரி 24 33. கிருஷ்ணகிரி 20 34. நீலகிரி 14 35. சிவகங்கை 12 36. புதுக்கோட்டை 6 37. தருமபுரி 4 37மாவட்டங்கள் மொத்தம் 7,204
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



