Show all

பாஜகவை அண்டியிருந்தால் அதிமுக கதி அதோகதிதான்! உணர்தலின் அடிப்படையில்: ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி தராது.

தமிழக முதல்வரின் அறிவிப்பு! காவிரி கழிமுகப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது.

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுக, தினகரன் ஆகியோரை எதிர்கொள்ள பாஜகவை அண்டியிருந்ததில் பிழையில்லை. சட்டமன்றத் தேர்தலில் மக்களை எதிர்கொள்ள பாஜகவை அண்டியிருந்தால் அதிமுக கதி அதோகதிதான் என்பதை அதிமுகவின் கடைசி தொண்டன் வரை அறிந்திருக்கவே செய்கின்றான். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை கழட்டி விடுதற்கு அறை போட்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறது அதிமுக.

இந்த வகைக்காக- உழவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கழிமுகப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதில் அரியலூர், புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்களும் அடங்கும். இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது என்று உறுதியாக அடித்துக் கூறியுள்ளார்

வேளாண்பெருமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சிறப்பு சட்டம் இயற்றப்படும். கழிமுக மாவட்ட வேளாண்மக்களின் துயரத்தை புரிந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள உழவர் சங்கங்கள், முதலமைச்சரின் அறிவிப்பை மனமார வரவேற்கிறோம். வரும் வரவுசெலவுக் கூட்டத்தொடரிலேயே சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக கிராமங்களுக்கு இனி மருத்துவர்களே கிடைக்க மாட்டார்களாமே? அதற்கு நீட்டுன்னு ஒரு தேர்வுதான் காரணமாமே. அதையும் கொஞ்சம் தமிழ்நாட்டுக்குள்ள விடாதிங்கப்பா. ஆமா! நீங்க வரிவாங்கிட்டு இருந்தப்ப கொஞ்சமா இருந்துச்சு. இப்போ அதை பாஜக நடுவண் அரசுகிட்ட தூக்கிக் கொடுத்து, அவனுக வருமானத்திலே அஞ்சுலே ஒருபங்கு வரியா கேட்கறானுங்களேப்பா? கொஞ்சம் அதுக்கும் முடிவு கட்டுங்கப்பா: தமிழக மக்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.