அரசியல்வாதிகளுக்குப் போராட ஆயிரம் இருக்கின்றன. நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டம் வேண்டாம். பாஜகவினருக்கு பிரபல இயக்குநர் பேரரசு அறிவுரை. திரையுலகையும், அரசியல் உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது விஜய் மற்றும் அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கை. படப்பிடிப்பு தளத்துக்கே வந்து அதிரடி காட்டினர் அதிகாரிகள். அதிரடிகள் ஒரு வழியாக முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. அங்கு சென்று பாஜகவினர் மிகச்சிலபேர்கள், விஜய்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய, கடைசியில் அந்த முன்னெடுப்பு சர்ச்சையில் முடிந்திருக்கிறது. ரசிகர்கள் இப்பவும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் இயக்குநர் பேரரசு பாஜக தலைமைக்கு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார்.
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரசியல்வாதிகளுக்குப் போராட ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டம் வேண்டாம். பாஜகவினருக்கு பிரபல இயக்குநர் பேரரசு அறிவுரை.
விஜய் நடிகர்,
அரசியல்வாதி அல்ல!
இந்தமாதரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெருப்பை உண்டாக்கும்!
அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும்.
நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ கருத்துருக்கள் இருக்கு! என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பேரரசு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



