Show all

மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைதாகி விடுதலை

மெரீனாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

     மெரீனா காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கைதான திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்டனர்.

     சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்றஉறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

     சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரினார்.

     அவைக் காவலர்களின் வெளியேற்று முயற்சியில், சட்டைப் பை கிழிந்த சட்டையுடன் சட்டமன்றத்தில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், நேராக ஆளுநர் மாளிகை சென்றுவிட்டு காந்தி சிலைக்கு வந்தார். ஸ்டாலின் உண்ணாவிரதத்தை தொடக்கியது அறிந்த ஏராளமான திமுகவினர் மெரீனாவில் குவிந்தனர்.

     காந்தி சிலை முன்பு ஸ்டாலினுடன் துரைமுருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுபபினர்கள் 88 பேரை காவல்துறையினர் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள சாமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.