Show all

ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படாதா என்று திமுக ஆர்வமுடன் காத்திருப்பு

சட்டமன்றத்தில், நேற்று நிறைவேறிய, நம்பிக்கை தீர்மானம் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் திமுக கடுமையான முயற்சி மேற்கொண்டது.

     தமிழகத்தில், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜானகி அணி, ஜெ., அணி என, கட்சி இரண்டாக பிளவுபட்டது. முதல்வராக பொறுப்பேற்ற ஜானகி, பெரும்பான்மையை நிரூபிக்க, 1988 சனவரி, 26ல், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

     அப்போது, ஜானகி அணியினரும், ஜெ., அணியினரும், சட்ட சபைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பல சட்டமன்ற உறுப்பினர்களின் வேட்டிகள் உருவப்பட்டன; சட்டைகள் கிழிக்கப்பட்டன; ரத்த காயம் ஏற்பட்டது.

     அப்போது சட்டமன்ற அவைத்தலைவராக இருந்த, பி.எச்.பாண்டியன், ஜானகி அணியில் இருந்தார். அவர், ‘எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம், சபாநாயகருக்கே உள்ளது’ எனக்கூறி, ஜெ., ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றி, ஓட்டெடுப்பை நடத்தினார். ஜானகி அணி பெரும்பான்மையை நிரூபித்து, வெற்றி பெற்றது.

ஆனாலும்,

‘சட்டமன்றம் கலவர பூமியாகி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருப்பதால், அது செல்லாது’ எனக்கூறி, நடுவண் அரசு, 1988 சனவரி, 30ல், ஆட்சியை கலைத்தது. ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

 

அதேபோல, நேற்று பெரும் ரகளையை பன்னீர் செல்வத்திடம் எதிர் பார்த்த திமுக- சிறுபான்மையினராக அவர்கள் அமைதி காத்த நிலையில், அடாவடி முயற்சியில் திமுக களம் இறங்கியது. தி.மு.க., - சட்டமன்ற உறுப்பினர்கள வெளியேற்றப்பட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இடைப்பாடி பழனிசாமி, 122 சட்;டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

1988ல் நடந்தது போல, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரவேண்டும் என்று திமுக காத்திருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.