Show all

சல்லிக்கட்டுக்காக தமிழக இளைஞர் நடத்திய போரட்டத்தைக் கொச்சை படுத்தும் முயற்சி

‘மன்னார்குடி உறவினர்களிடம் தமிழகம் சிக்கியுள்ளது; அந்த கும்பலிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இதற்காக, மெரினாவில் ஒன்று கூடுவோம்’

என்பதான தகவல்;, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக புரளி கிளப்பப் பட்டுள்ளது.

     இந்தப்புரளியைச் சாக்காக வைத்து யாரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், மெரினாவில், காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது.

     சல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சனவரி17 முதல், 23வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

     சென்னை மெரினாவில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு, சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், சல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் மூலம் அனுமதியும் கிடைத்தது.

     இளைஞர்களின் தமிழர் பாரம்பரிய மீட்பு முயற்சியை பாஜகவுக்கு சோரம் போகும் அமைப்பினர் கொச்சை படுத்தும் முகமான ஒரு புரளியை கிளப்பியிருப்பது வருத்தத்திற்குரியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.