Show all

சூழ்ச்சி வலைபின்னிய சூரப்பா! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஒருவர் நேரடியாக ஒன்றிய அரசாங்கத்திற்கு எப்படி கடிதம் எழுதினார் என்று சூழ்ச்சி வலைபின்னிய சூரப்பா மீது கண்டனம் வலுத்து வருகிறது.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய அரசு வழங்குதாகத் தெரிவிக்கிற சிறப்பு தகுதி தேவையில்லை; சிறந்த இடத்தில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார், தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன்

பெருமைக்குரிய அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு, சூழ்ச்சி வலைபின்னிய சூரப்பாவைக் கடந்த சில நாட்களாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. 

இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்பது இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கான ஒன்றிய அரசின் அங்கீகாரத் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஒன்றிய அரசுக்கு மடல் எழுதியிருக்கிறார். அந்த அங்கீகாரத்தால் நமது பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்போமேயன்றி அதனால் நமக்கு எந்த பயனும் இல்லவேயில்லை.

இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்கிற ஒன்றிய அரசின் அந்தத்  தகுதி தேவையில்லை மற்றும் அதை மாநில அரசு விரும்பவில்லை என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். 

தர்மபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்னும் தகுதியை ஒன்றிய பாஜக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்க முன்வந்துள்ளது என்று கூறினார்.

அதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், 69விழுக்காடு இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. ஏழை மாணவர்களை சேர்ப்பதற்காக நுழைவுத் தேர்வு அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அது மட்டுமல்லாமல், கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும். தமிழகத்திற்கு வெளியில் இருந்து அதிகமான மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும். இவற்றில் எதையும் அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளாது என்றார்.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே பொறுப்பு வகிக்கிறார்கள். தமிழக அரசிடம் கலந்தோசிக்காமல் நேரடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முன்னெடுப்பில் எம்.கே. சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்க மாநில அரசு துணை நிற்கும் கூறினார். இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்கிற ஒன்றிய அரசின் தகுதி நமக்குத் தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பட்டியில் இடுகிற ‘ஒன்றிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில்’ தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். சிறந்த தரவரிசை பெற எங்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்கிற ஒன்றிய அரசு அந்தத்  தகுதி வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே. சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக வலுவடைந்து வருகிறது, பல அரசியல் தலைவர்களும் கல்வி நிபுணர்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளனர். அவர்களின் முதன்மைக் கருத்து என்னவென்றால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஒருவர் நேரடியாக ஒன்றிய அரசாங்கத்திற்கு எப்படி கடிதம் எழுதினார் என்றும், 

அண்ணா பல்கலைக்கழகம் இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்கிற ஒன்றிய அரசின் அந்தத் தகுதிக்கு தேவையான நிதியை மாணவர் கட்டணங்கள் மூலமாக உருவாக்க முடியும் என்றும், தமிழக அரசின் உதவி தேவையில்லை என்றும் எப்படி கூறினார் என்றும், எம்.கே. சூரப்பாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.